மாறாம இருக்குற ஒரே விஷயம் கோலம்.கலர் போடி போட்டாத் தான் கோலத்துக்கே அழகு.அதை வீட்டுல இருக்குற ஒவ்வொருத்தருக்கும் விடிஞ்சும் விடியாம கூட்டிட்டு வந்து காமிச்சா தான் திருப்தி.என்ன,அம்மா வீட்டுல கோலம் போடும் போது(வருஷத்துக்கு 3 நாள்.தீபாவளி,பொங்கல்,ஆங்கிலப் புத்தாண்டு),என் கோலத்துக்கு வேற யாரும் கலர் போட்டா எனக்குப் பிடிக்காது.Pattern மாறுது,look மாறுதுன்னு புலம்புவேன்.இப்ப தனியா என் வீட்டுல கோலம் போடும் போது ,யாராவது கலர் குடுக்க எடுபிடி கிடைக்க மாட்டாங்களான்னு தோணுது.
எனக்கு எட்டு இல்லன்னா ஒன்பது வயசு இருக்கும் போது,எங்க வீட்டு வாசல்ல கோலம் போட்டுட்டு,தெருவுல உள்ள மத்த வீட்டு கோலமெல்லாம் பாக்க ரவுண்டு-அப் போனேன்..அன்னைக்கு நாள் முடியறதுக்குள்ள பயங்கரக் காய்ச்சல் வந்துடுச்சு.(இன்னைக்கு மாதிரி முதல் நாள் ராத்திரியே கோலம் போட்டுட்டுத் தூங்கற வசதியெல்லாம் அப்ப இல்ல பாருங்க!!).
ஏழாங்கிளாஸ் படிக்கும் போது என் கிளாஸ்மேட்ஸ் 4 பேருக்கு,பொங்கல் வாழ்த்து greetings வாங்கி அனுப்புனேன் .அப்பல்லாம்,இந்த greetings,gift எல்லாம் பெரிய விஷயம்.மொத்த செலவு 16 ரூ.அதுல ஒரு தோழி முகவரில அவங்க வீட்டுப் பின்கோடுக்குப் பதிலா,என் வீட்டுப் பின்கோடைப் போட்டு வீட்டுக்கு greetings திரும்பி வந்துடுச்சு.மறு நாள் கிளாஸ்ல நேராப் போய்க் குடுத்துட்டேன்.அந்தப் பொண்ணு(பெயர் கோமதி என்று நினைவு),நான் greeting அனுப்புறேன்னு சொல்லிட்டு அனுப்பலைன்னு கோவத்துல இருந்தது.ஆனாலும் மத்த மூணு பேருக்கும் ரொம்ப சந்தோஷம்.(நான் பெரிய சாதனைப் பெண்மணியால்ல வலம் வந்தேன்..).அந்த நாலு ரூபாய்னால எத்தன பேருக்கு சந்தோஷம்னு நினைச்சா அழுகறதா சிரிக்கறதான்னு தெரியல.
அதுலயும் எங்கம்மா நான் வீட்டுலயும் வாசல்லயும் பெயிண்ட் கோலம் போடா எனக்கு வைக்க வேண்டிய ice ஐயும் நான் போட்ட கண்டிஷனையும் நினைச்சா ..hmmm அது ஒரு கனாக் காலம்.என் uniform ல பெயிண்ட் ஐ கொட்டி நல்லா dose உம் வாங்கிருக்கேன்.போன வருஷம் தான் நான் முதல் முறையா பொங்கலே வச்சேன்.(அதுவும் pressure cooker ல தான்.!!)
வயசு ஏற ஏற பொங்கல் மேல இருக்குற ஆர்வம் குறைஞ்சுகிட்டே போச்சு.நாலு நாள் லீவு தான் ஒரே பிளஸ் பாயிண்ட்.கோலம் போட 5:30 க்கு உசுப்பினா,உலகத்தையே 1/2 மணி நேரம் சபிச்சுட்டு எந்திரிக்கிறது வழக்கம் ஆயிடுச்சு.
இப்பல்லாம் பொங்கல் எங்க வைக்குறது,அம்மா வீட்டுக்கு எப்பப் போறது,அத்தை வீட்டுக்கு எப்பப் போறது,3 வீட்டை பொங்கலுக்கும் தீபாவளிக்கும் பிரிச்சுக் குடுக்கவே மண்டை காயுது.ஆனாலும் என் குழந்தைக்கு சிறப்பான பொங்கல் அனுபவங்களைத் தரணும்னு நினைக்குறேன்.ஏன்னா எல்லாருக்கும் மலரும் நினைவுகள் தேவை தானே!!!!
அனைவருக்கும் தித்திக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்..